பல்லாயிரம் ஆண்டு பெருமையுடையதும், உலகின் பல மொழிகளுக்கு வார்த்தைகள் கொடுத்தும், நவீன உலகின் அனைத்து பொருளுக்கான வார்த்தைகளையும் தன்னகத்தே கொண்ட மொழியாம் தமிழ்மொழியின் சிறப்புகளை எடுத்து கூறும் நூலே தமிழ் வாழ வேண்டும் என்பதாகும்.
இதனை எழுதிய ஆசிரியர் முனைவர் மலையமானுக்கு இது 66 வது நூல் என்பது குறிப்பிடதகுந்தது. சுமார் 14 தலைப்புகளில் தமிழ்மொழியின் சிறப்புகளையும், பெருமைகளையும், ஆசிரியர் எடுத்து கூறியுள்ளார்.
தமிழ் என்றாலே பெரும்பான்மையோர் ஒரு ஏளனப் பார்வையே நம்மீது வீசும் நாட்டில் தமிழின் பெருமையை துல்லியமாக அலசும் நூல். அன்னிய மொழியை கொண்டாடும் அளவுக்கு இங்கு அன்னைமொழி வரவேற்கபடவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் தான் ஒருவன் தாய்மொழி தெரியாமலே முனைவர் பட்டம் கூட பெற முடியும். பாரிஸ் நகரில் இரண்டு தாய்மார்கள் சண்டை போட்டால் அவர்கள் கொடுக்கும் உச்சபட்ச சாபம் என்பது உனது பிள்ளைக்கு தாய்மொழி கற்று கொடுக்க ஆசிரியர் கிடைக்காமல் போகட்டும் என்பதாகும். ஆனால் இந்த சாபம் நமது தாய்மார்களுக்கு கிடைத்தால் மிகவும் மகிழ்வார்கள்
ஒரு மொழியின் அழிவுக்கு காரணங்களை ஆசிரியர் குறிப்பிடுகிறார். அரசின் முழு ஆதரவு இன்மை, இளம் தலைமுறையினர் தாய்மொழியில் கல்வி கற்காமை, பொருளாதாரம் அறிவியல் முதலிய துறைகளில் பயன்பாட்டு மொழியாக தாய்மொழி இன்மை, பிற மொழித் திணிப்பு அல்லது அளவுக்கு அதிகமாய் வேற்று மொழிக்கலப்பு ஆகியவையே அக்காரணங்களாகும். இந்த காரணங்கள் நம் தாய்மொழியை எவ்வாறு காயப்படுத்துகிறது என்பதை கண்டறிந்து அதனை நிவர்த்திசெய்வது நமது கடமையாகும்.
தமிழ் என்றாலே பெரும்பான்மையோர் ஒரு ஏளனப் பார்வையே நம்மீது வீசும் நாட்டில் தமிழின் பெருமையை துல்லியமாக அலசும் நூல். அன்னிய மொழியை கொண்டாடும் அளவுக்கு இங்கு அன்னைமொழி வரவேற்கபடவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் தான் ஒருவன் தாய்மொழி தெரியாமலே முனைவர் பட்டம் கூட பெற முடியும். பாரிஸ் நகரில் இரண்டு தாய்மார்கள் சண்டை போட்டால் அவர்கள் கொடுக்கும் உச்சபட்ச சாபம் என்பது உனது பிள்ளைக்கு தாய்மொழி கற்று கொடுக்க ஆசிரியர் கிடைக்காமல் போகட்டும் என்பதாகும். ஆனால் இந்த சாபம் நமது தாய்மார்களுக்கு கிடைத்தால் மிகவும் மகிழ்வார்கள்இந்நூலில் ‘கடவுள் படைத்த முதல் மனிதன் ஆடம். அவனுடைய மனைவி ஈவு. அவர்கள் வாழ்ந்த இடம் ஈடன் என்று விவிலியம் உரைக்கிறது. தமிழ்ச்சொல் ஆடவன் என்றது ஆடம் என்றும், குழந்தையை ஈபவள் ஈவு என்றும், வாழ்ந்த இடம் ஈடன் என்றும் திரிந்தது என ஆசிரியர் தெரிவித்துள்ளார். அடிக்கடி கேட்ட ஆலய வசனங்களினின் பின்னால் அன்னை தமிழ் இருப்பது மிகவும் வியப்புக்குரியது.
மேலும் தும்பி, மாதங்கம், தூக்கல், தோல் கறையடி, எறும்பி, உம்பல், வாரணம், புழைக்கை, ஒருத்தல், வல்விலங்கு, நாகம், கும்பி, யானை, நால்வாய், பூட்கை, குஞ்சரம், கரேணு, அத்தி, வேழம், உலா, கரி, களிறு, கைம்மா, சிந்துரம், மந்தமா, வயமா, இபம், புகர்முகம், தந்தி, மதாவளம், தந்தாவளம், வழுவை, ஆம்பல், மடுவைமா, மதகயம், போதகம்னு இப்படி பல பெயரை வசிக்கும்போது படிப்பது ஏதோ தமிழ் எழுத்தில் உள்ள உருது மொழியோ என நினைத்தால் இந்த 36 வார்த்தைகளும் யானையை குறிக்கும் வேறு பெயர்களாம். என்னா ஒரு மொழிவளம் !
பிரெசு மொழி தவிர வேறு எந்த மொழியிலும் இல்லாத ‘ழ’ தமிழில் மட்டுமே இருக்கிறது. கை, வை, பூ, போன்ற பொருள் தரும் ஓரெழுத்துகள் தமிழில் 64 உள்ளன. ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் தமிழ் மொழி பரவியிருந்தது என்பன போன்றவை தமிழின் சிறப்பு பெருமையாகும். அம்மா என்னும் தமிழ் சொல் 30 மொழிகளில் திரிபுடன் இன்றும் வழங்கப்படுகிறது.
ஒரு மொழியின் அழிவுக்கு காரணங்களை ஆசிரியர் குறிப்பிடுகிறார். அரசின் முழு ஆதரவு இன்மை, இளம் தலைமுறையினர் தாய்மொழியில் கல்வி கற்காமை, பொருளாதாரம் அறிவியல் முதலிய துறைகளில் பயன்பாட்டு மொழியாக தாய்மொழி இன்மை, பிற மொழித் திணிப்பு அல்லது அளவுக்கு அதிகமாய் வேற்று மொழிக்கலப்பு ஆகியவையே அக்காரணங்களாகும். இந்த காரணங்கள் நம் தாய்மொழியை எவ்வாறு காயப்படுத்துகிறது என்பதை கண்டறிந்து அதனை நிவர்த்திசெய்வது நமது கடமையாகும்.தேவநேயப்பாவாணர் பேசும் போது குறிப்பிடுவார் உலகிலேயே தனது பெயரை ஒரு மொழியிலும், இனிசியலை மற்றொரு மொழியிலும் எழுதும் ஒரே இனம் தமிழர்தான். எனவே மொழியுணர்வு நமக்கு மிகவும் அவசியம். நான் கூட அறியாத வயதில் ஆங்கில பாடத்தில் தோற்று எனது மொழியுணர்வை வெளிப்படுத்தியுள்ளேன். வடனாட்டு பாடகர்களும், தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் பல முறை எம் மொழியை கற்பழித்த பிறகும் கன்னி தமிழ் என்று மார்தட்டிக் கொன்டிருக்கும் எம் சமூகம் இனியாவது மொழியை காக்க முனைந்து செயலாற்ற வேண்டும். அதற்க்கு தமிழின் பெருமைகளை அறிய இப்புத்தகம் உதவும்.
தமிழ் வாழ வேண்டும், முனைவர் மலையமான், அன்பு பதிப்பகம், விலை 100, பக்கங்கள் 160

1 comments:
அருமை
ReplyPost a Comment